Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

15 லட்சம் பேர் வேலையிழப்பு... மோடி மாநிலத்திலேயே ஜிஎஸ்டி-க்கு எதிராகத் திரண்ட ஒரு லட்சம் மக்கள்!

ஜிஎஸ்டி-க்கு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆதரவும் எதிர்ப்பும் இன்றளவும் இருந்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஜிஎஸ்டி-க்கு எதிராக ஜவுளி வியாபாரிகள் மாபெரும் பேரணி ஒன்றை சமீபத்தில் நடத்தி, தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இந்த மாபெரும் பேரணி வீடியோவாக இப்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. 

ஜிஎஸ்டி, சூரத், மோடி, குஜராத்

குஜராத் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் சூரத் உள்ளது. இது, ஜவுளிகள் மற்றும் வைரங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரம் ஆகும். குஜராத்தின் பொருளாதாரத் தலைநகரான சூரத்தில் புதிய வரி விதிப்பு காரணமாக ஜிஎஸ்டி-க்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தங்களது எதிர்ப்பை மக்கள் காட்டியுள்ளனர். 3 கிலோ மீட்டர் வரை நீடித்த இந்த மாபெரும் பேரணியில் ஒரு லட்சம் பேருக்கும் மேல் கலந்துகொண்டதாக அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி-க்கு எதிராகக் கடந்த சில நாள்களாகச் சூரத்தில் நடைபெறும் வேலை நிறுத்தத்தின் காரணமாக 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மேல் வர்த்தகர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேலை நிறுத்தம் காரணமாக 15 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close