Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி அரசின்மீது மக்களுக்கு இவ்வளவு நம்பிக்கையா... அதிரவைக்கும் சர்வதேச ரிப்போர்ட்!

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development ), ’ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தங்கள் அரசாங்கத்தின்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்’ என்னும் ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு முடிவை ’Government at a Glance 2017’ என்னும் தலைப்பில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

modi
 

'மக்கள், தங்கள் அரசாங்கத்தின்மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பது இந்தியாவில்தான்' என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
73 சதவிகிதத்துடன் இந்தியா முன்னிலையில் உள்ளது. 62 சதவிகிதத்துடன் கனடா இரண்டாம் இடத்தில் உள்ளது. 30 சதவிகிதம் பெற்று, அமெரிக்கா 10 வது இடத்தில் உள்ளது. 13 சதவிகிதம் பெற்று, கிரீஸ் கடைசி இடத்தில் உள்ளது. கிரீஸ் மக்கள், அந்நாட்டு அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 


இந்த ஆய்வு முடிவு, சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறிவிட்டது. 'மோடி அரசின்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதற்கு இதுதான் சான்று’, ’மீண்டும் மோடியே ஆட்சி அமைப்பார்’ என்று ஒரு தரப்பு பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துவருகிறது. மற்றொரு தரப்பு, இந்த ஆய்வு முடிவுகள் பொய்யானவை என்றும் கூறிவருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close