Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சக்திவாய்ந்த வெடிமருந்து கண்டுபிடிப்பு!

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவையில், சந்தேகத்துக்குரிய வெள்ளை பவுடர் கண்டுபிடிக்கப்பட்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெடிமருந்து

உத்தரப்பிரதேச மாநிலத்தில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த நேரத்தில், சட்டப்பேரவையில் சந்தேகத்துக்குரிய வெள்ளைப் பவுடர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெள்ளைப் பவுடர் கண்டுபிடிக்கப்பட்டவுடன், சட்டப்பேரவையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், மோப்ப நாய் உதவியுடன் பாதுகாவலர்கள் வெள்ளைப்  பவுடரைக் கண்டுபிடித்தனர். எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைக்குக் கீழே இந்தப் பவுடர் கண்டுபிடிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்துக்குரிய முறையில் இந்தப் பவுடர் கண்டுபிடிக்கப்பட்டதால், உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

பாதுகாவலர்களின் ஆய்வின் முடிவில், கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய வெள்ளைப் பவுடர் PETN வெடிமருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டது. சக்திவாய்ந்த வெடிமருந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு அதிகரித்தது. போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் சட்டப்பேரவையின் பாதுகாப்பு வளையத்தைப் பலப்படுத்தினர். தற்போது, இதுகுறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close