Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் இலவசப் பள்ளி: பாராட்டுகள் பெற்ற ராணுவத்தின் முயற்சி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடோடி மக்களுக்காக ஓர் இலவசப் பள்ளியை ராணுவத்தினர் தொடங்கியுள்ளனர்.

ராணுவப் பள்ளி

Representative image

காஷ்மீரில் ‘அனைவருக்கும் கல்வித் திட்டம்’ என்ற இலவசப் பள்ளியை இந்திய ராணுவத்தினர் தொடங்கி, பல மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்துவருகின்றனர். காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் என்ற பகுதியில், இந்தப் பள்ளியை ராணுவத்தினர் தொடங்கியுள்ளனர். ‘ஆபரேஷன் சாத்பவனா’ என்ற திட்டத்தின் பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தப் பள்ளியில், அந்தப் பகுதியில் உள்ள நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், மதிய உணவு மற்றும் இதரத் தேவைகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்பட்டுவருகிறது. பள்ளி, கல்வி என்ற வார்த்தைகளே கேள்விப்படாத இந்த மக்களுக்கு ராணுவத்தினர் இலவசக் கல்வி அளிப்பது, பலரது ஆதரவையும் பாராட்டுகளையும் பெற்றுத்தந்துள்ளது.

முன்னதாக, ராணுவத்தினரின் முயற்சியினாலேயே ‘ஸ்கூல் சலோ’ என்ற திட்டத்தின் அடிப்படையில் காஷ்மீரில் உள்ள பல உட்பகுதிகளைத் தேடிச்சென்று, ராணுவத்தினரே கல்விப் பயிற்சி வழங்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close