Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமர்நாத் கோயிலில் குவியும் பக்தர்கள்: ஒரே நாளில் 9,000 பேர் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயிலில், சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம்  உள்ளது.

அமர்நாத்

இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில், ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், சிவபெருமான் பனிலிங்க வடிவில் தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். குறிப்பிட்ட 48 நாட்களைத் தவிர்த்து, மற்ற நாட்களில்  ஆண்டுதோறும் இந்தக் கோயில் பனியால் மூடப்பட்டே இருக்கும். அதனால், பனி இல்லாத இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே சிவ தரிசனம் கிடைக்கும் என்பதால், பனிலிங்கமாகக் காட்சிதரும் சிவபெருமானைத் தரிசிக்க, இந்தியா மட்டுமன்றி பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்வது அதிகரித்துள்ளன.

அமர்நாத் கோயிலில், நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 9,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 15 நாள்களுக்கு முன்னர் தொடங்கிய இந்தப் புனித யாத்திரையின்மூலம், இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களை, ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக தரிசனத்திற்கு அழைத்துச்சென்று வருகின்றனர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close