Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகை கடத்தப்பட்ட விவகாரம்; நடிகர் திலீப் மேனேஜர் தலைமறைவு..!

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், அவரின் மேனேஜர் அப்புண்ணி தலைமறைவாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி மலையாள நடிகை ஷூட்டிங் முடிந்து திருச்சூரிலிருந்து கொச்சி நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கொச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் தென்னிந்திய திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நடிகை கடத்தல் தொடர்பாக பல்சர் சுனி உள்ளிட்ட 7 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

 பல்சர் சுனி வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் தொடர்பான ஆதாரங்களும் போலீஸாரிடம் சிக்கியது. இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு, போலீஸார், நடிகர் திலீப்பை கைதுசெய்தனர். தற்போது ஆலுவா சப் ஜெயிலில் திலீப் அடைக்கப்பட்டு, பின்பு விசாரணைக்காக திருச்சூர் போன்ற பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார். இன்றோடு இரண்டு நாள் போலீஸ் காவல் முடிகிறது. திலீப் கைது செய்யப்படுவதுக்கு முன்பாக அவரது மேனேஜர் அப்புண்ணி மற்றும் நடிகர் நாதிர்ஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி இருந்தனர்.

எந்த நேரம் அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அப்புண்ணியிடம் போலீஸார் தெரிவித்து இருந்தார்கள். அதன்படி நேற்று மீண்டும் விசாரணைக்காக அப்புண்ணியை போலீஸார் தொடர்புகொண்டபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பின் அப்புண்ணியின் 5 நம்பர்களைத் தொடர்புகொண்டும், அனைத்துமே ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் போலீஸார் நேரில் அப்புண்ணி வீட்டுக்கும் ஆபீஸுக்கும் சென்று பார்த்தனர். அங்கும் அவர் இல்லை தலைமறைவாகிவிட்டார். ஏற்கெனவே, தலைமறைவாக இருந்த நடிகை காவ்யா மாதவன், நேற்று போலீஸில் ரகசியமாக ஆஜராகியுள்ளார். நடிகர் திலீப் கைது செய்யப்பட்டப் பின் அவரின் மேனேஜர் அப்புண்ணி தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close