Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டார்ஜிலிங்கில் முற்றுகிறது போராட்டம்: அரசு அலுவலகங்களுக்குத் தீ வைப்பு!

டார்ஜிலிங் பகுதியில் நடந்து வரும் போராட்டத்தில், இன்று போராட்டக்காரர்களால் அரசு அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.

டார்ஜிலிங்

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கூர்க்கா இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். கூர்க்கா இன மக்கள் தனி மாநில உரிமை கேட்டுப் போராடி வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளனர். காலவரையற்ற போராட்டம், கடையடைப்பு என இருந்து வந்த போராட்டத்தில் கூர்க்கா அமைப்பின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதால் தீவைப்பு, கடை உடைப்பு என மக்கள் போராட்டம், கலவரமாக வெடிக்கத் துவங்கியுள்ளது.

இன்று போராட்டக்காரர்கள் நகரில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களுக்குத் தீ வைத்தனர். பிராந்திய நிர்வாக அலுவலகம், சுற்றுலா அலுவலகம், அரசு பங்களா எனப் பலவற்றிருக்கும் தீ வைக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்கும் தீ வைத்தனர். முன்னதாகக் கடந்த வாரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close