Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிரட்டும் வெள்ளம்... மிதக்கும் அருணாச்சல பிரதேசம்!

arunachal pradesh, வெள்ளம்

தொடர் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கையும், நிலச்சரிவுகளையும் சந்தித்து வருகிறது அருணாச்சலப் பிரதேசம். அம்மாநிலத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து, தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பபும் பாரே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 14 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அமைச்சரும், அம்மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.,யுமான கிரண் ரிஜிஜூ மற்றும் மாநில முதல்வர் பீமா கண்டு ஆகியோர் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர். 

அப்போது பேசிய மத்திய அமைச்சர் ரிஜிஜூ, 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்படுவார்கள். அவர்களுக்கான நிவாரண உதவியும் வழங்கப்படும். மீட்புப்படையினர் துரிதமாகச் செயல்பட்டு வருகின்றனர். எந்த உதவியையும் செய்ய மத்திய அரசு தயாராகவே உள்ளது' என்றார். இந்நிலையில், வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close