Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’எனக்குப் பழக்கப்பட்ட திலீப் குற்றவாளி அல்ல’- ஆதரவுக் குரல் கொடுக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன்!

எனக்கு அறிமுகமான நடிகர் திலீப் குற்றவாளி அல்ல எனப் பிரபல மலையாள இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

நடிகை பாவனா கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் விசாரணை செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை வரையிலும் போலீஸ் கஸ்டடி கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதும், மலையாள நடிகர்கள் சங்கமான 'அம்மா' அமைப்பில் இருந்து அவரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள ரசிகர்களால் அதுவரையிலும் கொண்டாடப்பட்ட அவரை ரசிகர்களும் நிந்தித்தனர். நீதிமன்றத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கு திரண்ட திரைப்பட ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அதிர்ச்சி அளித்தனர். கேரளாவின் சாமன்ய மக்களும் அவருக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கிறார்கள். 

இந்நிலையில், கேரளாவில் முதல் முறையாக நடிகர் திலீப்புக்கு ஆதரவாக ஒரு குரல் ஒலித்துள்ளது. அதுவும், அனைவராலும் மிகவும் மரியாதைக்கு உரியவராகக் கருதப்படும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்னனிடம் இருந்து அந்த ஆதரவுக் குரல் வந்துள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’நடிகர் திலீப்பை நான் கடந்த சில ஆண்டுகளாக நன்றாக அறிவேன். எனக்குத் தெரிந்த திலீப் கொடுமையான குற்றச் செயல்களைச் செய்பவரோ அல்லது தலைமறைவு தாதாவோ அல்ல. 

பொதுவாக ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அது தொடர்பான விசாரணையைக் கவனிக்க வேண்டுமே தவிர, உடனடியாக அவரை குற்றவாளியாகக் கருதி விடக்கூடாது. ஆனால், திலீப் விஷயத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அவரை மீடியாக்கள் குற்றவாளி என தீர்ப்பளித்துவிட்டன. இது சரியான செயல் அல்ல” என்றார். நடிகர் திலீப் நடித்த ’பின்னேயும்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர், அடூர் கோபாலகிருஷ்ணன். விருது வென்ற அந்தத் திரைப்படத்தில் திலீப், சாமான்ய மனிதன் பேராசையால் எப்படி கிரிமினலாக மாறுகிறான் என்பதைத் தத்ரூபமாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் நாயகியாக காவ்யா மாதவன் நடித்திருந்தார்.

நடிகர் திலீப் ஆதரவாக மலையாளத்தில் ஒலித்துள்ள இந்த முதல் குரலை திரையுலகினர் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close