Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப்பிரதேசம்: இஸ்லாமிய குடும்பம் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல்!

உத்தரப்பிரதேசத்தில், இஸ்லாமிய குடும்பம் ஒன்றை ரயிலில் வைத்து மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

ரயில்


உத்தரப்பிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம் கடந்த புதன் கிழமை ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது மர்ம நபர்கள் இரும்பு ராடு மூலம் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக, அதில் ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையும் காயமடைந்துள்ளது. பெண்களும், இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.


மர்ம நபர்கள் அந்தக் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இஸ்லாமியை குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, தங்களது ஊருக்குத் திரும்புவதற்காக ரயிலில் சென்றுள்ளனர். அப்போது, அந்த குடும்பத்தின் மாற்றுத்திறனாளி குழந்தையிடம் இருந்த செல்போனை மர்ம நபர்கள் பறித்ததாகவும், இதைத் தட்டிக் கேட்டதற்காக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.


அதேபோல, அந்தக் குடும்பத்தில் இருந்தப் பெண்ணை, ஒரு நபர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இதனால் அந்த நபரை குடும்பத்தினர் அடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களைப் பலி வாங்குவதற்காக, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close