Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மல்லையா ஆஜரானால் தான் அவருக்கு தண்டனை வழங்க முடியும் - உச்ச நீதிமன்றம் கருத்து

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குப் பறந்துவிட்ட கிங்ஃபிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜரானால் மட்டுமே அவருக்குத் தண்டனை வழங்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதோடு, அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில் அவர் மீது 1300 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிய குற்றச்சாட்டும் அமலாக்கப்பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ள விவரங்களின்படி விஜய் மல்லையா 1300 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை 13 போலி நிறுவனங்கள் மூலமாக வெள்ளையாக்கியிருக்கிறார். 

இந்த 13 நிறுவனங்களும் அமெரிக்கா, அயர்லாந்து, மொரிஷியஸ் மற்றும் ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயங்குவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இந்த 13 நிறுவனங்களிலும் எந்தவிதமான தொழில் செயல்பாடுகளும் நடக்கவில்லை என்பதும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் அமலாக்கப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016 மார்ச் முதல் லண்டனில் இருந்து வருகிறார். அங்கிருந்து மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசு கூறிவருகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close