Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தை திருமணத்தைத் தவிர்த்தால் 33 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கலாம்: உலக வங்கி ஆய்வில் தகவல்

இந்தியாவில் குழந்தைத் திருமணம், சிறுவயதிலேயே குழந்தைப் பெற்றுக்கொள்வதையும் தவிர்த்தால் அடுத்த ஏழு ஆண்டுகளில் ரூ.33,500 கோடியைச் சேமிக்கலாம் என்று உலக வங்கி மற்றும் பெண்கள் மீதான சர்வதேச ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

குழந்தைத் திருமணம்

இந்தியாவில் 10 - 19-க்கு இடையிலான வயதினரில் ஏறக்குறைய 17 மில்லியன் பேர் திருமணமானவர்களாக இருக்கிறார்கள். இப்படி சிறு வயதிலேயே திருமணம் செய்யப்படுவதால் மக்கள் தொகை அதிகரிக்கிறது. மக்கள் தொகை அதிகரிக்கும்போது  அரசு போடும் பட்ஜெட் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைத் திருமணம் செய்துகொள்பவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. பால்வினை நோய்களும் அதிகரிக்கின்றன. சிறுவயதிலேயே கர்ப்பம் தரிக்கும் போது அனிமியா, மலேரியா, எய்ட்ஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்று உலக சுகாதாரம் மைய ஆய்வுகள் சொல்கின்றன. 

எனவே, குழந்தைத் திருமணத்தைத் தவிர்ப்பதன் மூலம் அரசுக்கு ஆகும் செலவுகள் குறையும். இதன் மூலம் அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியா ரூ.33,500 கோடி (5 பில்லியன் டாலர்) சேமிக்க முடியும். உலகில் அதிகம் குழந்தைத் திருமணம் செய்யும் 18 நாடுகளில் குழந்தைத் திருமணத்தைத் தவிர்த்தால், உலக அளவில் 17 பில்லியன் டாலர் சேமிக்கலாம் என்று உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close