Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தூக்கி அடிச்சிடுவேன்...பாத்துக்கோ' - மிரட்டும் லேடி பௌன்சர் மெஹ்ருனிஷா!

டெல்லியில் ஒரு கேளிக்கை விடுதியில் பவுன்சராகப் பணியாற்றி வரும் மெஹ்ருனிஷா, நாட்டிலேயே முதல் பெண் பௌன்சர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

லேடி பவுன்சர் மெஹ்ருனிஷா

பாரில் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆட்களை வெளியே தூக்கிப் போடும் பௌன்சர்களாகப் பல கேளிக்கை விடுதிகளிலும் ஆண்களே பணியாற்றுவர். ஆனால், நாட்டிலேயே முதன்முறையாக டெல்லியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மெஹ்ருனிஷா என்ற இளம்பெண் பணியாற்றி வருகிறார். ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் இந்த வேளையில் சிறப்பாகவே பணியாற்ற முடியும் எனக் கூறுகிறார் மெஹ்ருனிஷா.

மேலும் அவர் கூறுகையில், ‘சிறு வயதில் போலீஸ், ராணுவம் போன்ற வேலைகளில் பணியாற்ற வேண்டும் என விரும்பியே உடல்நலத்தை மேம்படுத்தத் தொடங்கினேன். சூழ்நிலைகளின் காரணமாக இப்பணியில் சேர்ந்தாலும், இப்போது மிகவும் மகிழ்ச்சியாகவே இப்பணியை மேற்கொள்கிறேன். தொடக்கத்தில் உறவினர்கள், சகோதரர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பெற்றோர்களின் ஊக்கத்தாலேயே இப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன்’ என்றார்.

கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தபோதும், செய்யும் வேலையைச் சிறப்பாகவே செய்து வருகிறார் மெஹ்ருனிஷா. கேளிக்கை விடுதிகளுக்கு வரும் ஆண்கள், பெண்கள் என அனைவரையும் கட்டுப்படுத்த அசராமல் பத்து மணி நேரத்துக்கும் மேல் நின்றுகொண்டே பணியாற்றுகிறார் இந்த ‘லேடி பௌன்சர்’.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close