Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்குப் பரிசுத்தொகையுடன் காமராஜர் விருது!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் சிறப்பான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையுடன் காமராஜர் விருது வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இந்தத் தகவலை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் நடைபெற்ற கல்வித்திருவிழாவில் தெரிவித்திருக்கிறார். 

காமராஜர் விருது

இவ்விழாவில் 'ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் 15 பேருக்குக் காமராஜர் விருதுடன் தலா பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் 15 பேருக்குக் காமராஜர் விருதுடன் தலா இருபதாயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும்' என்று தெரிவித்திருக்கிறார். மேலும் 'அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற ரூ.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், விரைவில் மேல்நிலை வகுப்புகளான ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கணினி மயமாக்குவதற்கு ரூ.324 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும்' தெரிவித்து இருக்கிறார்.  தற்போது நடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் காமராஜர் விருது வழங்கப்படும் என்று மட்டும் அறிவித்திருந்தார் அமைச்சர். தற்போது யாருக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்பதைத் தெரிவித்திருக்கிறார். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விவரங்களை வெளியிடவில்லை. 'ரேங்க் பட்டியல் வெளியிடும்போது பள்ளிகளிடையே போட்டி சூழ்நிலை உருவாகுகிறது என்பதால் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுவது கைவிடப்படுவதாக' பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close