Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் வயதான பெண் புலி ’ஸ்வாதி’ உயிரிழந்தது!

இந்தியாவின் வயதான பெண் புலி ஸ்வாதி இன்று உயிரிழந்துவிட்டது. அஸாமின் கவுகாத்தியில் உள்ள உயிரியல் பூங்காவில் பெங்கால் புலியான ஸ்வாதி பாதுகாக்கப்பட்டு வந்தது. 1997 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த ஸ்வாதி இதுவரை 11 குட்டிகள் ஈன்றுள்ளது. அவை அனைத்தும் ஆரோக்கியமான நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

oldest tifer
 

2005 ஆம் ஆண்டு அஸாம் மாநில உயிரியல் பூங்காவுக்குள் காலடி எடுத்து வைத்த ஸ்வாதி அனைவரின் மனம் கவர்ந்த செல்ல விலங்கு. வயது முதிர்ந்த போதும் உற்சாகத்துடன் சுற்றித் திரிந்துக் கொண்டிருக்கும் என்கிறார் பூங்கா அதிகாரி தேஜஸ். பொதுவாக புலிகள் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அரிது. ஸ்வாதிக்கு 20 வயது கடந்துவிட்டது. இதை பெரிய விழாவாக கொண்டாட வேண்டும் என்று கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர்தான்  உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் அதற்குள் ஸ்வாதி இறந்துவிட்டது அனைவருக்கும் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close