Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியைக் குலைத்தால்...'- மோடி எச்சரிக்கை

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, 'பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக அமைதியைக் குலைப்பவர்களுக்கு எதிராக, மாநில அரசுகள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி

மேலும், 'சட்டம் ஒழுங்கைக் காப்பது மாநில அரசுகளின் கடமை. சமூக விரோதக் கும்பலுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பசு என்பது ஒரு தாய்போலத்தான். அதைக் காக்க சட்டம் இருக்கிறது. எனவே, பசுவைக் காப்பேன் என்ற பெயரில் சட்டத்தை மீறக்கூடாது. நாட்டில் நிலவிவரும் அமைதியான சூழலைக் குலைப்பதற்கு சில கும்பல்கள் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

நாட்டில், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்த பின்னரும் அதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனம் சாதிப்பதாக,பா.ஜ.க-வை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில்தான் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close