Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தி சொல்வது என்ன?

இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. பா.ஜ.க. சார்பில் நிற்கும் ராம் நாத் கோவிந்த்துக்கும் எதிர்க்கட்சிகள் சார்பில் நிற்கும் மீரா குமாருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தேர்தலில் வாக்களிக்கப்போகும் மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார். 

சோனியா காந்தி

'இந்த ஜனாதிபதி தேர்தல், சித்தாந்தங்களுக்கு எதிரான, நம்பிக்கைகளுக்கு எதிரான போட்டி. இந்தத் தேர்தலில், ஒவ்வொருவரும் அவர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மகாத்மா கொடுத்த இந்தியாவை நாம் காப்பதற்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. நம்மைப் பிரித்தாலும் மிகவும் குறுகிய எண்ணம்கொண்டவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்துவிடக்கூடாது. இப்போதுதான், முன்னெப்போதையும்விட மிகவும் கவனமாக இருக்கவேண்டிய கட்டம். நமக்கு எந்த மாதிரி எதிர்காலம் வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் நிர்ணயிக்கும் வகையில் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close