Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! முதல் வாக்கைப் பதிவுசெய்தார் முதல்வர் பழனிசாமி

ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், நாடு முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில், முதல் வாக்கை முதல்வர் பழனிசாமி பதிவு செய்தார்.

ஜனாதிபதி தேர்தல்

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், ஆளும் பா.ஜ,க.சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில், மீரா குமார் போட்டியிடுகிறார். தமிழகத்தில், ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக டெல்லியிலிருந்து வந்திருந்த தேர்தல் மேற்பார்வையாளர்கள், கடந்த சனிக்கிழமை மாலை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வுசெய்தனர்.

இந்த 15-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத்தில், சென்னை-600 009, புனித ஜார்ஜ் கோட்டை, சட்டமன்றப் பேரவைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள 'குழுக் கூட்ட அறை' -யில், காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் வாக்கை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிவுசெய்தார். இதைத்தொடர்ந்து, எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் தங்கள் வாக்கைப் பதிவுசெய்தனர்.  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். இதையடுத்து, தி.மு.க. எம்எல்ஏ-க்கள் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் வாக்களித்துவருகின்றனர். காலை 10 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சட்டமன்றப் பேரவைச் செயலாளர் (பொ) க. பூபதி, சட்டமன்றப் பேரவைச் செயலக இணைச் செயலாளர் பா.சுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close