Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி இவர்களுக்கு சாம்பார் வடை, மிக்ஸர், ஜூஸ் `கட்'!

சாம்பார் வடை, மிக்ஸர், ஜூஸ் போன்ற உணவுப் பொருள்களை ஊழியர்களுக்கு வழங்குவதை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ நிறுத்த முடிவுசெய்துள்ளது. 

சாம்பார், வடை, மிக்சர், டிஜிசிஏ


சமீபத்தில், ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம், உள்நாட்டில் சேவை வழங்கும் எகானமி கிளாஸ் விமானங்களில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்தியது. செலவு மற்றும் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க, இந்தப் புதிய பாலிசி கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. ஏர் இந்தியா விமானப் பயணத்தின்போது, கேட்டரிங் செலவுக்காக ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை செலவிடுகிறது. இந்த நிலையில், உள்நாட்டில் சேவை வழங்கும் எகானமி கிளாஸ் விமானங்களில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்தியதன் மூலம், 8 கோடி ரூபாய் மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டிஜிசிஏ ஊழியர்களின் அலுவலகக் கூட்டங்களில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நிதி பற்றாக்குறை காரணமாகவும் சாம்பார் வடை, சாண்ட்விச், ஜூஸ், மிக்ஸர், போஹா, மீத்தி தாகி போன்ற சிறப்பு உணவுப் பொருள்களை ஊழியர்களுக்கு வழங்குவதை நிறுத்துவதாக, டிஜிசிஏ முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டீ, காபி, மற்றும் பிஸ்கட் மட்டுமே வழங்கப்படும் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close