Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மரபணு மாற்றுப் பயிர்: உச்ச நீதிமுன்றம் முக்கிய உத்தரவு!

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் பயன்படுத்துவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, 'மரபணு மாற்றப்பட்டப் பயிர்களைச் சந்தைக்குக் கொண்டுவருவது என்பது மிக மிக முக்கியமான விஷயம். இது குறித்து மிகவும் கவனமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். ஏனென்றால் இது ஒரு முறை அனுமதிக்கப்பட்டால் அதனால் உண்டாகும் விளைவுகள் மீண்டும் ஈடுகட்ட முடியாத அளவுக்கு இருக்கும்' என்று தெரிவித்து, 'இது குறித்து இன்னும் ஒரு வாரம் எடுத்துக்கொண்டு, எந்தக் கொள்கை முடிவு எடுக்கலாம் என்று கூறுங்கள்' என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேஹ்தா, 'மரபணு மாற்றப்பட்டப் பயிர்களை சந்தைகளில் விற்பனைக்குக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு, இதுவரை எந்தவிதக் கொள்கை முடிவையும் எடுக்கவில்லை. இது குறித்து பல மட்டங்களில் ஆராய்ந்து வருகிறோம். மேலும், இந்த விஷயம் குறித்து அனைத்து கருத்துகளையுபம் பரிசீலித்து வருகிறோம்' என்று கூறினார். 

சென்ற ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி மரபணு மாற்றப்பட்ட கடுகை விற்பனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close