Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்னும் கவுன்டிங் மெஷினே வரலை... பணத்தை எப்ப சார் எண்ணி முடிப்பீங்க!? #Demonetization

`என் பணத்தை வாங்கி உள்ளே போடும்போது, கணக்கு இல்லாமலா போட்டார்கள்? இது என்ன கோயில் உண்டியலா, திறந்து எண்ணுவதற்கு? கணக்கோடுதானே எல்லா வங்கிகளிலிருந்தும் வந்திருக்கும்? அந்தக் கணக்குத் தெரியாதா?' என்று சாமானியர்கள் கேட்கும் நிலைதான் உள்ளது பணமதிப்பு நீக்கத்தையடுத்து (Demonetization), ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை. 

demonetization

ஏனெனில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் `செல்லாத பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி, இரவு-பகலாக நடந்துவருவதாக' கூறியிருந்தார். இந்த நிலையில், ரூபாய் நோட்டை எண்ணுவதற்காகக் கடந்த 2016-ம் ஆண்டில் வெளிநாட்டில் 10 கவுன்டிங் மெஷினை இந்திய ரிசர்வ் வங்கி ஆர்டர் செய்தது. `இந்த கவுன்டிங் மெஷின், வெளிநாட்டிலிருந்து இன்னும் ரிசர்வ் வங்கியிடம் வந்து சேரவில்லை' என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. 

`சமீபத்தில், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு?' என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக, நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், ``வங்கிகள், தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இரவு-பகலாக நடந்துவருகிறது. இந்தப் பணி இன்னும் முடிவடையவில்லை. ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக, மற்ற விடுமுறை நாள்களைக்கூட ரத்துசெய்துவிட்டு 500, 1,000 ரூபாய் தாள்களை எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது. போதிய கவுன்டிங் மெஷின் இல்லாத காரணத்தினால், பணம் எண்ணும் பணி தாமதமடைந்துவருகிறது'' என்றார் 

ரூபாய் நோட்டை எண்ணுவதற்காக 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆர்டர் செய்த புதிய கவுன்டிங் மெஷின்கள் 10x10 அடி பெரிய மெஷின். `லட்சக்கணக்கான ரூபாய் நோட்டை ஓரிரு விநாடிகளில் எண்ணிட முடியும். அதே சமயம் கள்ள ரூபாய் நோட்டை வெளியேற்றிடவும் முடியும்' என்கின்றனர். ஆனால், இன்னும் வெளிநாட்டிலிருந்து கவுன்டிங் மெஷின் வராத காரணத்தினால் பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி தாமதம் ஆவதாகச் சொல்கின்றனர். அதே நேரத்தில், பணமதிப்பு நீக்கத்தையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியில் அனைத்து துறைகளிலிருந்தும் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால், ரிசர்வ் வங்கியின் பெரும்பாலான பிரிவுகளில் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி  வெளிவந்த `பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்பு, நம் நாட்டு மக்கள் அனைவரையும் திக்குமுக்காடவைத்தது. பணமதிப்பு நீக்கத்தையடுத்து ஓரிரு வாரங்கள் மட்டுமே எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது; எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால், முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் மட்டுமே வெளிவந்தன. இன்றுடன் 250 நாள்களுக்குமேல் கடந்துவிட்டது. இன்னும் பணமதிப்பு நீக்கத்தையடுத்து எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பது குறித்து எந்த  ஓர் அறிவிப்பும் இல்லை; பணத்தை எண்ணுவதற்காக ஆர்டர் செய்த கவுன்டிங் மெஷினும் வரவில்லை. 

பணமதிப்பு நீக்கத்தையடுத்து கால்கடுக்க வங்கியின் வாசலில் நின்றதுதான் சரித்திர சாதனைபோல. எதிர்பார்த்ததைவிட அதிக பணம் டெபாசிட் ஆகியுள்ளதோ என்னவோ அரசு இன்றும் வாயை மூடியே உள்ளது. கடலில் கலந்த எண்ணெய்யை வாளியை வைத்து அள்ளியதுபோல, பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் கைகளால் எண்ணுகிறார்களோ என்னவோ! அதனால்தான் மாதங்கள் பல கடந்தும் இன்னும் எண்ணும் பணி நடந்துகொண்டிருக்கிறது. இல்லையெனில், எச்சிலை பொறுமையாகத் தொட்டுத் தொட்டு எண்ணுகிறார்களா அல்லது இன்னும் மிச்சம் இருக்கும் இரண்டு வருஷத்துக்கு எண்ணிட்டுத்தான் இருப்பார்களா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close