Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று வாக்கு எண்ணிக்கை

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது இன்று மாலை அதிகாரபூர்வமாகத் தெரிந்துவிடும். 

குடியரசுத் தலைவைர் வேட்பாளர்

 

கடந்த 17-ம் தேதி, இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்ற வாக்குப் பதிவில் 99 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

வாக்குப் பதிவுக்குப் பின்னர், வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, மாலை ஐந்து மணிக்குள் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில், வாக்கு எண்ணிகை தொடங்குகிறது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கென்று தனித் தனியே வாக்கு மதிப்பீடுகள் உண்டு. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, அவர்களின் மாநில மக்கள் தொகையைக் கருத்தில்கொண்டு மதிப்பீடுகள் வழங்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மதிப்பீடாகும்.

மொத்த வாக்கு மதிப்பீடுகளில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் வெற்றிபெறுவார். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், எதிர்கட்சிகளின் சார்பாக மீரா குமார் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா, வரும் 26-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close