Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மயிரிழையில் உயிர் தப்பிய கங்கனா! படப்பிடிப்பில் என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டது. அதனால் ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கங்கனா

கங்கனா ரனாவத் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘Manikarnika-The Queen of Jhansi'. இந்தியில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. கங்கனாவுக்கான வாள் சண்டைக்காட்சிகளைப் படமாக்கிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அவரின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அதனால், நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டியதைக் கண்ட படக்குழுவினர் பதற்றம் அடைந்தனர். உடனே ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ‘IICU’ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது அவருக்கு நெற்றியில் 15 தையல்கள் போடப்பட்டன. இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இதுகுறித்து படத் தயாரிப்பாளர் கமல் ஜெயின் கூறும்போது, “இந்த சண்டைக் காட்சிகளுக்காக பல நாட்கள் அவர் பயிற்சி எடுத்துவந்தார். கங்கனாவுக்கும் நடிகர் நிஹாருக்குமான வாள் சண்டைக்காட்சியைத்தான் படமாக்கிக்கொண்டிருந்தோம். வாள் வீசத் தாமதித்த தருணத்தில், அவரின் நெற்றியில் வாள் வெட்டியது. புருவத்துக்கு அருகில் அடிபட்டதால் ரத்தம் கொட்டியது. அடுத்த 30 நிமிடத்திலேயே மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுவிட்டோம். ஜான்சி ராணியைப் போலவே வலியைத் தாங்கிக்கொண்டு தைரியமாக இருந்தார்” என்று கூறினார் தயாரிப்பாளர்.

கங்கனா

மருத்துவமனையிலிருந்து அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பிறகு, நெற்றியில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யவிருப்பதாகவும் தகவல். ஜான்சி ராணியின் பையோபிக்காக உருவாகிவரும் இந்தப் படம், அடுத்த ஏப்ரலில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close