Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தப்பியோடிய கைதி 25 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சிறைக்குத் திரும்பினார்..!

திருவனந்தபுரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலிருந்து தப்பிய கைதி தற்போது சிறைக்குத் திரும்பியுள்ளார். 


கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த நாசர் என்பவருக்கு தற்போது வயது 55. கொலைக் குற்றத்துக்காக 1991-ம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவருடன் சேர்ந்து நான்கு பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 30 நாள்கள் பரோலில் வெளியே சென்ற அவர் தப்பி ஓடியுள்ளார்  என தெரிவித்த காவல்துறையினர், 'அரேபிய நாடுகளுக்குத் தப்பி ஒடிய நாசர், அங்கேயே பணிபுரிந்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார். இங்கு திரும்பி வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோய்கான சிகிச்சை எடுத்துவந்துள்ளார். பின்னர் தனது குடும்பத்துக்குப் பாரமாக இருக்கவேண்டாம் என்று எண்ணிய அவர் சிறைக்குத் திரும்பியுள்ளார்' என்று தெரிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close