Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைத் தாக்குவதை ஏற்க முடியாது..! மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைத் தாக்குவதையோ கொலை செய்வதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

வட மாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், மாட்டுக் கறியை எடுத்துச் செல்பவர்களையும், மாடுகளைக் கொண்டு செல்பவர்களைக் கும்பலாகச் சேர்ந்து தாக்குவதும், கொலை செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்துவருகின்றன. இந்தச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் உறுதியான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வின் கீழ் ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது. இன்று விசாரணை வந்த இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பிரமாணப் பத்திரத்தில், 'பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களைத் தாக்குவதையோ கொலை செய்வதையோ ஏற்றுக்கொள்ளக் முடியாது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதிகமான அளவில் தாக்குதல்கள் நிகழும் ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close