Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருமான வரித்துறை நோட்டீஸ்! சிக்கலில் மலையாள நடிகர் சங்கம்

எப்போதும் இல்லாத வகையில் கேரள திரையுலகம் பரபரப்பாக காணப்படுகிறது. மலையாள நடிகர் சங்கத்தின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்திய பணத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறு வருமான வரித்துறை ஆணையர், நடிகர் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

dilip

 

மலையாள நடிகர் சங்கத் தலைவராக இன்னசென்ட, பொதுச்செயலாளராக மம்மூட்டி, துணை செயலாளராக மோகன்லால், பொருளாளராக திலீப் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் அடிக்கடி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் நடிகர் சங்கத்துக்கு பல கோடி ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வருமானவரி துறைக்கு பல புகார் வந்தன. கடந்த ஆறு ஆண்டுகளில் நடிகர் சங்கம் சார்பில்  இரண்டு முறை கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஆனால் 8 கோடியை சமூக சேவைக்கு செலவு செய்ததாகவும் மீதி 2 கோடியை மட்டும் வருமான வரித்துறையில் கணக்கு காட்டி உள்ளனர். சமூக சேவைக்காக செலவு செய்யப்பட்ட 8 கோடிக்கும் முறையான ஆவணங்கள் இல்லை.

இதனால் நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது. அதில் செலவு செய்த பணத்தை முறையான ஆவணங்களோடு  அறிக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மலையாள நடிகர் சங்கம் பரபரப்பாக காணப்படுகிறது. நடிகை கடத்தப்பட்ட வழக்கை தொடர்ந்து  கடந்த சில நாள்களுக்கு முன்தான் நடிகர் திலீப் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்படதக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close