Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சசிகலா தப்பிக்கவே முடியாது': அடித்துச் சொல்லும் ரூபா!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் இன்னும் சில வி.வி.ஐ.பி-களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்படுவதாக ரூபா ஐ.பி.எஸ் துணிச்சலாகத் தெரிவித்தார். சசிகலா சிறை அறையில் சமையலறை, குளிர்சாதனப் பொருள்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபா தெரிவித்தார். இது, கர்நாடக அரசியலிலும் ஐ.பி.எஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூபா

இந்தச் சூழ்நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி-யாகப் பணியாற்றிய ரூபா, போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதோடு, ரூபாவால் குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை உயரதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, சிறைக்குள் சசிகலா  உலாவவது போன்ற வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பைக் கிளப்பியது. 


இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ரூபா, "சசிகலா சிறைக்குள் ஐ-போன் மற்றும் 2 சிம்கார்டு வைத்திருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அவரிடம் சோதனை நடத்தியபோது, அதை, என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வெளியில் உள்ளவர்களிடம் தற்போதும் தொடர்பில் இருக்கிறார்.


சசிகலாவுக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறையில் விதிமுறைகளை மீறியது குறித்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close