Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேள்விக்குறியாகும் ரயில் உணவின் தரம்: மேம்படுத்த முயலும் ரயில்வே அமைச்சகம்

ரயில் உணவுகளின் தரம் கேள்விக்குறியானதைத் தொடர்ந்து உணவின் தரம் உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் விரைவில் எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரயில் உணவு

இந்திய ரயில்வே நடத்திவரும் கேட்டரிங் சர்வீசஸ் குறித்து ’கன்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்’ தணிக்கை அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, இந்திய ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும் பயணிகளுக்குப் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துவதாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், உற்பத்தி நிலையங்களில் சுகாதாரம் பேணப்படவில்லை. டீ, காபி போன்றவற்றுக்கு சுகாதரமில்லாத நீரைப் பயன்படுத்துகிறார்கள். குப்பைத் தொட்டிகள் திறந்த நிலையில் இருப்பதோடு, பல நாள்கள் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ரயில் உணவுகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய உணவுக் கொள்கையை வகுத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி ரயில்வே சமையலறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் புதிய சமையலறைகள் அமைக்கப்படும் என்றும் இதற்கான ஒப்பந்தங்களும் மாற்றப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close