Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் 8-வது நாளாக போராடும் தமிழக விவசாயிகள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் போராட்டம் டெல்லி
 

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த  மார்ச் மாதத்தில் தொடங்கி 41 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், அவர்கள் கடந்த 16-ம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தின் 7-வது நாளான நேற்று, விவசாயிகள் பாதி மொட்டையடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 8-வது நாளான இன்று மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகளை வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தென் இந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. "தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்" என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close