Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய இந்தியாவிலும் மாறாத காட்சி!

ரூபாய் நோட்டு வாபஸ், ஜி.எஸ்.டி அமல் என கடந்த மூன்று ஆண்டுகளில், பல முறை புதிய இந்தியா பிறந்துவிட்டதாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு கிராமங்களில் இன்னும் மருத்துவச் சேவைக்கே படாதபாடு படவேண்டியதாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது உறவினர்களின் சடலங்களைத் தோளில் சுமந்துசென்ற கொடுமையைப் பார்த்திருப்போம்.


இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கன்சபண்டேல் என்ற கிராமத்தின்  அருகே, சாலையில் மூன்று மரங்கள் விழுந்துள்ளன. இதனால், அங்கு போக்குவரத்துச் சேவை முற்றிலும் முடங்கியது. இதனிடையே, அந்தக் கிராமத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  ஆம்புலன்ஸை அழைத்தபோது, மரம் விழுந்துள்ளதால் வர முடியாது என்று கூறியுள்ளனர். இதனால், அந்த கர்ப்பிணிப் பெண்ணை மூங்கில் மூலம் சுமார் 16 கி.மீ தூரத்துக்கு அவரது உறவினர்கள் சுமந்துசென்றுள்ளனர். பின்னர், குறிப்பிட்ட தூரம் சென்றதும் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.


இந்தச் சம்பவம் நடைபெற்ற இதே கலஹந்தி மாவட்டத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் வர மறுத்ததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படகுமூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.  காலதாமதம் ஏற்பட்டதால், பிறந்த குழந்தை உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close