Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகளிர் உலகக் கோப்பையில் அதிரடிகாட்டிய கவுர் டி.எஸ்.பி ஆனார்!

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றாலும், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கிரிக்கெட் என்றால் இந்திய ஆடவர் அணி என்ற பார்வையை மாற்றியுள்ளனர். நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குச் சென்றது இந்திய அணி. மகளிர் உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திவரும் இரு அணிகளையே அசைத்துப் பார்த்தது இந்திய மகளிர் அணி.

ஹர்மன்ப்ரீத்


குறிப்பாக, அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதில் முக்கியப் பங்காற்றியவர், ஹர்மன்ப்ரீத் கவுர். 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை அதிரவைத்தார் கவுர். மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அவர் அரை சதம் அடித்து அசத்தினார்.

அடுத்தடுத்து அசத்திய கவுருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக பஞ்சாப் மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அவருக்கு பஞ்சாப் காவல்துறையில் பணி வழங்குவதாக அந்த மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற விருப்பம் சிறு வயதிலிருந்தே உள்ளதாம். இதைத்தொடர்ந்து, உலகக் கோப்பையில் அவரது அதிரடி ஆட்டத்தால், அவருக்கு பஞ்சாப் காவல்துறையில் டிஎஸ்பி-யாக நியமித்து அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close