Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பறிமுதல் ஆகிறதா லாலு மகளின் சொத்துகள்..?: தீவிரம் காட்டும் அமலாக்கத்துறை!

லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதியின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவுசெய்துள்ளது.

மிசா பாரதி

ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்தவர். இந்நிலையில் பினாமி பெயரில் சொத்துக் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவரது குடும்பத்துக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதையொட்டி லாலுவின் மகள் மிசா பாரதியும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கினார். அமலாக்கத்துறையின் தொடர் சம்மன், மிசாவின் ஆடிட்டர் கைது என அதிரடி காட்டிவந்த அமலாக்கத்துறை தற்போது மிசாவின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான முயற்சியில் தீவிரம் காட்டியுள்ளது.

மிசா பாரதி, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின்  பாராளுமன்ற எம்பி-யாக உள்ளார். மிசாவும் அவரது கணவர் சைலேஷ்குமாரும் ரூ.8000 கோடி அளவுக்கு பணமோசடியில் ஈடுபட்டிருந்தது உறுதியான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகவே கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close