Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்: 25,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

குஜராத் மாநிலத்தில், கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்துவருகிறது. குறிப்பாக பனஸ்கந்தா, சபர்கந்தா போன்ற வடக்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதுவரை 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குஜராத் வெள்ளம்


அதில் பெரும்பாலானோர், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். தேசியப் பேரிடர் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, விமானப்படை ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தனேரா பகுதியில் மட்டும்  6 மணி நேரத்தில்  235 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்ந்து பெய்துவருவதால், தேசிய பேரிடர் மீட்புப் படையிலிருந்து மேலும் 6 குழுக்கள் குஜராத் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


இதையடுத்து, மீட்புப் பணிகளை மாநில முதல்வர் விஜய் ரூபானி பார்வையிட்டார். அங்கு, வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனஸ்கந்தாவில், ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்பட 339 சாலைகள், 20 மாநில நெடுஞ்சாலைகள், 218 கிராமச் சாலைகள் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளன. 

அதேபோல ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கனமழை பெய்துவருகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close