Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்! கலாம் வழியில் செயல்படுவேன் என உறுதி

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சி சார்பில் மீரா குமாரும், ஆளும் கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்தும் போட்டியிட்டனர். இதில், ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார்.

இதையடுத்து, ஜனாதிபதியாக ராம்நாத் பதவியேற்ற நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. அவருக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய ராம்நாத், பணிவுடன் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன். ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் உள்ளிட்ட முன்னாள் குடியரசுத் தலைவர்கள் காட்டிய வழியில் செயல்படுவேன். எனது பணியைத் திறம்பட மேற்கொள்வேன். குடியரசுத் தலைவரின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். இந்தப் பொறுப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

இந்த விழாவில் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். புதிய ஜனாதிபதிக்கு பிரணாப் முகர்ஜி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close