Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் திடீர் விலகல்!

பீகார் முதலமைச்சர் பதவியை நிதீஷ்குமார் ராஜினாமா செய்தார். சிறிது நேரத்துக்கு முன்னர், பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். நிதிஷ் குமார் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

பீகாரில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தினர். தேர்தலில் வெற்றி பெற்ற அந்தக் கூட்டணியில், ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். அதன்பின்னர், இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்பட்டன.

குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது மிகப் பெரிய அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையில் துணை முதல்வர் தேஜஸ்வி வீட்டில் ஊழல் புகார் காரணமாக சிபிஐ சோதனை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தேஜஸ்வியை நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்துவதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கிடையில், தேஜஸ்வி துணை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யமாட்டார் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார். கருத்து வேறுபாடுகள் முற்றியிருந்த நிலையில், இன்று திடீரென பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். நிதிஷ் குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close