Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீ என்ன பைத்தியமா..?' : மின்வெட்டுகுறித்த கேள்விக்கு ஆந்திர முதல்வரின் பதில்!

ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில், இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதனால், அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அந்தத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்தத் தொகுதிவாசி ஒருவர் சந்திரபாபு நாயுடுவிடம்  மின்வெட்டுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு


அப்போது, ஏரளாமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்ததால், சந்திரபாபு நாயுடு செம கடுப்பாகிவிட்டார். "எப்படி நீ என்னிடம் இப்படிப் பேசலாம். நான் இந்த மாநிலத்தின் முதல்வராகவும் அரசியல் கட்சித் தலைவராகவும் இங்கு வந்துள்ளேன். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று இத்தனை பேர் என்னைச் சூழ்ந்திருக்க, எந்த தைரியத்தில் என்னிடம் இப்படி பேசினாய்...

நீ என்ன பைத்தியமா? மது அருந்தியுள்ளாயா? அல்லது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அனுப்பிய ஆளா?" என்று சகட்டுமேனிக்குத் திட்டியுள்ளார். இதனால், அந்தத் தொகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 இதே நந்தியால் தொகுதியில் கடந்த மாதம், "நாங்கள் வழங்கும் ஓய்வூதியம், நாங்கள் அமைத்த சாலை, நாங்கள் வழங்கும் ரேஷன் பொருள்கள் என்று எங்களால் பயன் அடைந்துகொண்டிருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது, அரசியல்ரீதியாக எங்களுக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கக்கூடாது" என்று கூறி சந்திரபாபு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close