Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்பானி வீட்டில் அலறல் சத்தம்! போலீஸுக்குப் பறந்த நள்ளிரவு புகார்

பிரபல ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிலிருந்து அதிகளவில் சத்தம் வருவதாக அக்கம்பக்கத்தார் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

அம்பானி வீடு

குடியிருப்புகளில் விலை உயர்ந்ததாக லண்டனில் உள்ள 'பக்கிங்ஹாம் பேலஸ்' கருதப்படுகிறது. இது அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. அதே வேளையில், தனி ஒருவருக்குச் சொந்தமான பங்களாவாக உலகிலேயே அதிக விலை மதிப்புகொண்டது முகேஷ் அம்பானியின் Antilia. நிலத்தின் மதிப்போடு சேர்ந்து தற்போது இந்த பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி. உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட ரெசிடென்சியல் பகுதியாகக் கருதப்படும் அல்டாமவுன்ட் சாலையில் இது அமைந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் சதுர அடியில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. 27 அடுக்குகளே இருந்தாலும் சில மாடிகள் மிக உயரமாகக் கட்டப்பட்டுள்ளன. அதனால், இந்த பங்களா கிட்டத்தட்ட 40 மாடிக் கட்டடத்துக்கு இணையான உயரம் கொண்டது. பங்களாவில் இல்லாத விஷயங்களே கிடையாது. மினி தியேட்டர், நீச்சல் குளம், விமான தளம் என அத்தனை வசதிகளும் ஐந்து பேர் கொண்ட அம்பானி குடும்பத்தார் வாழும் இந்த வீட்டில் உள்ளது.

நேற்றிரவு அம்பானியின் வீட்டிலிருந்து அதிகளவில் சத்தம் வருவதாகவும், அதிக சத்தத்துடன் கூடிய ‘மியூசிக் சிஸ்டம்’ தங்களுக்கு தொந்தரவு அளிக்கிறது என்றும் அம்பானி வீட்டின் அருகில் வசிப்போர் நகர் போலீஸாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து, உடனடியாக அப்பகுதிக்கு சோதனைக்கு வந்த போலீஸார், அதுபோல் எவ்வித சத்தமும் இல்லை எனத் திரும்பியுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close