Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2400 உயிர்கள் பலி : வரலாற்றில் மிக மோசமான சிகிச்சை பேரழிவு! 37 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு!

ங்கிலாந்து 1970. ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த 2,400 நோயாளிகள் மிகக் குறுகிய கால இடைவெளியில் உடனுக்குடன் திடீரென மரணத்தைத் தழுவினர். காரணத்தை ஆராய்ந்தபோது பல மர்மங்கள் வெளிவந்தன. 'நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ரத்த மாற்றுச் சிகிச்சையில், அவர்களது உடம்பில் செலுத்தப்பட்ட ரத்தமானது, HIV மற்றும் HCV நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்டது' என்கிற அதிர்ச்சி தரக்கூடிய உண்மை வெளிவந்தது. மருத்துவ வரலாற்றில் மிக மோசமான சிகிச்சைப் பேரழிவான இந்தச் சம்பவத்துக்கு நீதி கேட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். இதுகுறித்து இங்கு விரிவாக அலசுவோம்...

ஹீமோபீலியா நோயும்... சிகிச்சை முறையும்!

நம் உடலில் இருந்து ரத்தம் வெளியேறும்போது, அதன் உறைவுத் தன்மை சரியான அளவு இருக்க வேண்டும். ஆனால், மரபணுக் குறைபாடுகளின் காரணமாகவோ, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாகவோ அல்லது ரத்தத்தில் 55 சதவிகிதம் உடைய பிளாஸ்மா காரணிகள் எனப்படும் தண்ணீர், உப்பு, நொதி, ஆன்டிபயாடிக் மற்றும் பிற புரதங்களின் செயல்பாடுகள் குறைந்தாலோ ஹீமோபீலியா நோய் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் உள் அல்லது வெளிக்காயங்கள் ஏற்பட்டால் ரத்தம் எளிதில் உறையாது. விபத்து நேர்ந்தால் தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்படும். இதனால், உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். 

பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்த ஹீமோபீலியா பிரச்னைக்கு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் சில தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் ஒன்று, ஆரோக்கியமானவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தில் உள்ள புரதங்களைப் பவுடராகப் பிரித்தெடுத்து, அதை ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடம்பில் செலுத்தி, அதன்மூலம் நோயாளிகளின் ரத்தத்தில் உறைவுத் தன்மையை அதிகரிக்கச் செய்வது.

ஹீமோபீலியா

4,800 நபர்கள் பாதிக்கப்பட்டது எப்படி?

1970-களில் இங்கிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த முறையைப் பின்பற்றித்தான் ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த முயற்சிகள் எடுத்தனர். இதற்கு அதிக அளவிலான மனித ரத்தத்தைச் சேகரிக்க வேண்டி இருந்ததால், பொது மக்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டது. அப்போது மிகப்பெரிய அளவில் ரத்த தானம் செய்வது குறித்து விளம்பரங்கள் செய்யப்பட்டன. அதிக அளவிலும் நன்கொடைகள் அறிவிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் பலர், ரத்தத்துக்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தனர். இங்கிலாந்தில் இது மிகப்பெரிய வணிகமாக மாறியது. அதே காலகட்டத்தில், இங்கிலாந்து மக்கள் மத்தியில் அப்போது HIV நோய் அதிக அளவில் பரவியிருந்தது. பல ஆண்களும் பெண்களும் குடி மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அதிக அளவில் அடிமையாகிக் கிடந்தனர். பணத்துக்காக இப்படியான மக்களும் ரத்த தானத்தில் பங்கேற்றனர். துரதிர்ஷ்டவசமாக இவர்களிடம் இருந்து பெறப்பட்ட தூய்மையற்ற ரத்தத்தைக் கொண்டும் ஹீமோபீலியா நோயாளிகளுக்குச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மிகப்பெரும் தவற்றால் 4,800 நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அதன் பாதிப்புகளால் 2,400 நபர்கள் இறந்துபோயினர். 1,200 நபர்கள் HIV-யால் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். 

உண்மை வெளிவந்தது எப்படி?

இந்தச் சம்பவம், இங்கிலாந்தையே புரட்டிப்போட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான நோயாளிகளின் இறப்புக்கான உண்மைக் காரணம் மட்டும் சில ஆண்டுகள் வெளியே தெரியவில்லை. 1980-களுக்குப் பிறகு சில நோயாளிகளின் உடல்களைப் பரிசோதனை செய்தபோது, அவர்களின் ரத்தத்தின் வழியே HIV பரவியிருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்தால் நீண்ட காலத்துக்குப் பிறகு உண்மைக் காரணம் உறுதி செய்யப்பட்டது. அதேவேளையில், உண்மையை மறைக்கப் பலதரப்பில் இருந்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்து அரசாங்கம், ''NHS வழங்கும் மருந்துப் பொருள்களை வாங்குவதில்லை'' என்று அறிவித்தது. பிறகு மருத்துவ அமைப்புகளுக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் இன்றுவரையிலும் பிரச்னை நீடித்துவருகிறது.

HIV

இன்றைய நிலை என்ன? 

2,400 நபர்களின் மரணத்துக்கு உண்மையில் காரணமானவர்கள் யார்... ரத்தத்தைச் சேகரித்தவர்களா... மருந்து தயாரித்தவர்களா... அனுமதி வழங்கிய அதிகாரிகளா... பயன்படுத்திய மருத்துவ நிர்வாகங்களா... அரசாங்கத்தின் அலட்சியமா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துவந்தது. இந்த ஒட்டுமொத்த குற்றச்செயலை பத்திரிகைகள் நீண்டநாட்களாக மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பிரச்னையைச் சரிகட்டவும் பல தரப்பில் இருந்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், மரணமடைந்த 2,400 நபர்களின் குடும்பங்களுக்கும், உடல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிரந்தரமான தீர்வு இன்றுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில், இதுகுறித்துச் சில தினங்களுக்கு முன்... ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமராக இருந்துவரும் தெரசா மே, ''மருத்துவ உலகில் 1970 - 80-களில் நடந்த இந்த அநீதிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு நிரந்தரத் தீர்வு காணப்படும்'' என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

மருத்துவம் தற்போது பல நவீன பரிசோதனை வசதிகளையும், கடுமையான கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் கொண்டுள்ளது. ஆனால், இன்றுபோல் அன்று இல்லை. எதிர்பாராமல் நடந்த விபத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழக்க வேண்டி இருந்தது. மருத்துவ உலகம் தன் தவற்றில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டுவிட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இனியாவது பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close