Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத் கடல் பகுதியில் சிக்கிய ரூ. 5 ஆயிரம் கோடி ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன ?



                                                குஜராத் கடல் எல்லையில் சிக்கிய ஹெராயின்

குஜராத் மாநில கடல் பகுதியில் ரூ. 5ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடலோரக்  காவல்படையால் கைப்பற்றப்பட்டது. குஜராத் கடல் வழியாக வரும் சரக்குக் கப்பலில் அதிக மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கடத்துவதாக, இந்தியக் கடலோர காவல் படைக்கு தகவல் வந்தது. நேற்று (ஞாயிறு) மாலை குஜராத் கடல் எல்லையான போர்பந்தர் பகுதியில் கடலோரக் காவல்படையின் கூடுதல் டி.ஜி.பி. நடராஜ் தலைமையிலான குழுவினர், ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்தபடி குறிப்பிட்ட கடற்பரப்பை  துப்பாக்கி முனையில் வளைத்தனர். கடலோர காவல்படையின் ரோந்துப் படகுகளுக்கும் இதுகுறித்த 'அலெர்ட்' முன்னரே  இருந்ததால், ரோந்துப் படகுகளும் அந்தப் பகுதிக்கு விரைந்தன. சுங்கத்துறை, போலீஸார் மற்றும் கடலோரக் காவல்படையினர் அந்த சரக்குக் கப்பலை சுற்றிவளைத்து விடவே, சரக்குக் கப்பல் அங்கிருந்து நகர முடியவில்லை. இதையடுத்து, சரக்குக் கப்பலுக்குள் இறங்கிய அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஹெராயின் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து கடலோர காவல்படை செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மத்திமன், "பறிமுதல்செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு 3.500 கோடி. குஜராத் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் இவ்வளவு போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதுகுறித்து கடலோர காவல்படை, காவல்துறை, உளவுத்துறை, சுங்கத்துறை, கடற்படை ஆகியவை விசாரிக்கும்" என்றார். பிடிபட்டுள்ள ஹெராயினின் எடை 1,500 கிலோ ஆகும். எடையின் கணக்கில் இதன் விலையை  'எடை' போட்டால்,  சர்வதேச மதிப்பில் 5 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். கடத்தல் தொடர்பாக பிடிபட்டவர்களில் 10 பேர் மட்டுமே இந்தியர்கள், பிறர் வெளிநாட்டவர்கள் என்பதால், இந்தக் கடத்தலில் சர்வதேச போதைக் கடத்தல் கும்பல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தியப் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்துள்ள இந்த அதிரடி ஆபரேஷன், அனைத்துத் தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் கடலோரக் காவல் கூடுதல் டி.ஜி.பி. நடராஜ், தமிழர். நடராஜ் தலைமையிலான டீமிற்கு மத்திய அரசிலுள்ள முக்கிய அதிகாரிகள் ஒவ்வொருவரும் தனித்தனியே பாராட்டு தெரிவித்துள்ளனராம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close