Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஃப்ளிப்கார்ட் ஆர்டர்கள்... டெலிவரி கொடுக்கும் அமேசான்’: வாடிக்கையாளர்களை அசத்த புது முயற்சி

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பொருள்கள் எந்தத் தளமானாலும் இனி வரும் காலங்களில் அமேசானே அனைத்து டெலிவரிகளையும் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

அமேசான்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைப் பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த ஃப்ளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் தனது தொழில் வளத்தைப் பெருக்கவும் வாடிக்கையாளர்களைக் கவரவும் புதிய முயற்சி ஒன்றை எடுக்கவுள்ளது.

இதன்படி ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் என்று எந்தத் தளத்தில் எந்தப் பொருள்கள் ஆர்டர் செய்தாலும் அதை அமேசான் நிறுவனமே டெலிவரி செய்யவுள்ளது. ”அமேசான் என்னும் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற ‘அமேசான் போக்குவரத்துச் சேவை’ எனத் தனியொரு டெலிவரி நிறுவனமாக மாற்ற முயன்று வருகிறோம்” என அமேசான் நிறுவனத்தின் இணை நிறுவனர் கோயல் தெரிவித்துள்ளார். கூடுதலாக அமேசான் நிறுவனம் உணவு வர்த்தகத்திலும் விரைவில் கால் பதிக்கவுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close