Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தலைவர் பதவியிலிருந்து விலக மாட்டேன்!'- அமித் ஷா அதிரடி

சீக்கிரமே மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா, 'என்னவானாலும் கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகமாட்டேன்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா

அமித் ஷா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் பெரிய மாநிலமான உ.பி-யில், பா.ஜ.க அபார வெற்றியைப் பெற மூளையாகச் செயல்பட்டவர். பா.ஜ.க ஆட்சி அமைத்தப் பின்னர், கட்சியின் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் நெருங்கிய நண்பர்கள். தேசியத் தலைவராக பல மாநிலங்களில் கட்சி வெற்றிபெற, வியூகங்களை வகுத்தவர். 

தற்போது, குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதில், ஏற்கெனவே அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கூடுதலாக, அமித் ஷா-வும் மாநிலங்களவை எம்.பி-யாக மனுத் தாக்கல் செய்துள்ளார். குஜராத்தில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இருப்பதால் அமித் ஷா கண்டிப்பாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. மேலும், அவர் எம்.பி-யாக பொறுப்பேற்றப் பிறகு பாதுகாப்புத்துறை அவருக்கு ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா, 'கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து கண்டிப்பாக நான் விலகப் போவதில்லை. கட்சியின் தலைவராக நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அதில் முழு மனதோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close