Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்... 186 பேர் உயிரிழப்பு!

குஜராத், flood

வரலாறு காணாத கனமழையால் பெரும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது குஜராத் மாநிலம். வட குஜராத்தின் பனஸ்கந்தா, படான் பகுதிகள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், சபர்மதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது அங்கு அச்சத்தை அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் களத்தில் இறங்கியுள்ளன. பேரிடர் மீட்புப் படையினரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளனர். பனாஸ் ஆற்றில் இருந்து 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ருபானி பேசுகையில், ‘இந்த நூற்றாண்டின் மிக மோசமான வெள்ளம் இது’, என்றார். தனேரா பகுதியில் 4000 டன் தானியங்கள் கனமழையால் சேதமடைந்துள்ளன. இதற்கு, ‘உரிய நிவாரணம் அளிக்கப்படும்’, என குஜராத் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம், 29-ம் தேதி வரை மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் குஜராத் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அகமதாபாத், காந்திநகரின் அபாயகரமான பகுதிகளில் சிக்கியிருந்த 54,517 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close