Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம்!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார்

’அடிப்படைச் சேவைகளைப் பெற ஆதார் கட்டாயம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்தது மத்திய அரசு. இதற்காக ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 1-ம் தேதிக்குள் பொதுமக்கள் பலர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவில்லை. இதனால், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து, பிறகு கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close