Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியால் நியமிக்கப்பட்ட அரவிந்த் பனகாரியா திடீர் ராஜினாமா!

நிதி ஆயோக் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அரவிந்த் பனகாரியா அறிவித்துள்ளார். 

Arvind Panagariya
 

’நிதி ஆயோக்’  என்பது இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீர்மானிக்கும் மத்திய அரசின் ஒரு அமைப்பு. பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு இந்தியத் திட்ட கமிஷனுக்கு மாற்றாக ’நிதி ஆயோக்’ அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், நிதி ஆயோக் அமைப்பின் தலைவராகவும் மோடி பொறுப்பேற்றார்.

மோடியால் நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர்தான் அரவிந்த் பனகாரியா.  இரண்டு ஆண்டுகள் நிதி ஆயோக்கின்  செயல்பாட்டைக் கவனித்து வந்த அரவிந்த் பனகாரியா, இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மோடியால் நேரடியாக நியமிக்கப்பட்டவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது மத்திய அரசு வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி துணைத் தலைவர் பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக அவர் விலக உள்ளதாகவும், அதன்பிறகு அவர் கல்வித்துறையில் பணியாற்றப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close