Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'புதிய அணைகளை ஏன் கட்டுவதில்லை?' தமிழக அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!

தமிழக அரசு ஏன் புதிய அணைகளைக் கட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, கர்நாடகத்துடன் காவிரி, ஆந்திராவுடன் பாலாறு என்று தமிழகத்துக்கும், அண்டை மாநிலங்களுக்குமான நீர் பிரச்னை எப்போதும் தீராத ஒன்றாகத் தொடர்ந்து இருக்கிறது. இந்நிலையில், காவிரி வழக்குத் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது, "தமிழக அரசு புதிய அணைகளை ஏன் கட்டக் கூடாது. புதிய அணைகளைக் கட்டாமல், கர்நாடகா அரசு அணைக் கட்டுவதை மட்டும் எதிர்ப்பது ஏன்" என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு, "புதிய அணைகள் கட்டுவதற்கு தமிழகத்தில் புவியியல் அமைப்பு இல்லை. தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், கர்நாடக அரசு முடிவு எடுப்பதால் எதிர்க்கிறோம்" என்று கூறியது. 

 "காவிரி விவகாரத்தில் தனக்குள்ள பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாகக் கூறிவிட்டு, பின்னர், பின்வாங்கியது ஏன்" என்று ஏற்கெனவே மத்திய அரசிடம், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close