Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீங்கள் எனக்கு அப்பா போன்றவர்...' - பிரணாப்புக்கு மோடி எழுதிய நெகிழ்ச்சிக் கடிதம்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஜூலை 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தைப் படித்த பிரணாப் இன்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'நான் ஜனாதிபதியாக இருந்த கடைசி நாளன்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து இந்தக் கடிதத்தைப் பெற்றேன். இது என் மனதைத் தொட்டது. உங்களிடமும் அதைப் பகிர்கிறேன்' என்று தலைப்பிட்டு கடிதத்தின் நகலைப் பதிவு செய்துள்ளார்.

பிரணாப்புடன் மோடி

பிரதமர் மோடி பிரணாப்புக்கு எழுதிய கடிதத்தில், 'எனக்கு முன் இருக்கும் சவால் மிகப் பெரியது. இதைப் போன்ற நேரங்களில் எனக்கு நீங்கள் ஒரு தந்தைபோல இருந்திருக்கிறீர்கள். உங்கள் அன்பும் அரவணைப்பும் எனக்கு இன்னும் நம்பிக்கையையும் உறுதியையும் அளித்தது. மிக நீளமான சந்திப்புகள் மற்றும் பிரசாரங்களை அடுத்து, 'உன் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வாய் என்று நம்புகிறேன்' என்ற உங்களின் ஒரு போன் அழைப்பு எனக்கு அவ்வளவு புத்துணர்ச்சியைத் தரும். நம் இருவரின் அரசியல் பயணம் இரு வேறு கட்சிகளில் உருவானது. நம் சித்தாந்தம், சில நேரங்களில் மாறுபட்டிருக்கும். நம் அனுபவங்களும் மிகவும் வித்தியாசமானது. இந்திய மக்களுக்கு நீங்கள் மிகப் பெரிய நம்பிக்கையாகத் திகழ்கிறீர்கள். இந்தியா உங்களை நினைத்து என்றும் பெருமைப்படும். ஒரு ஜனாதிபதியாக நீங்கள் மிகத் தாழ்மையான பொது சேவகர். மிகச் சிறந்த தலைவர். உங்கள் பாதை எங்களைத் தொடர்ந்து வழி நடத்தும். உங்களோடு சேர்ந்து பிரதமராக வேலை செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close