Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தேடப்படும் நபர்' கார்த்தி சிதம்பரம் - மத்திய அரசு திடீர் அறிவிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கார்த்தி சிதம்பரத்தைச் தேடப்படும் நபராக அறிவித்துள்ளது மத்திய அரசு.

karthi chithambaram

கார்த்தி சிதம்பரம் மீது அந்நிய செலாவணி மோசடிக் குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்த வழக்கை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில் இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அனுப்பப்பட்ட கவன சுற்றறிக்கையில் தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தின் பெயரும் இடம் பிடித்துள்ளது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. 

அந்நியச் செலாவணி வழக்குகளில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்த நிலையில், தற்போது இந்தச் சுற்றறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது . 
தற்போது, கார்த்தி சிதம்பரம் தன்னைத் தேடப்படும் நபராக அறிவிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளர். அதில் அவர், "லுக் அவுட் சுற்றறிக்கையில் எனது பெயர் தேடப்படும் நபர் பட்டியலில் இருக்கிறது. அந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close