Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெங்கைய நாயுடு வெற்றி உறுதி! எம்.பி-க்களை சந்திக்கிறார் மோடி

வெங்கய்ய நாயுடு

ற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாளை நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் வெங்கைய நாயுடு போட்டியிடுகிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த நிலையில், துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தாலே போதுமானது. 

துணை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு வேட்பாளராகப் போட்டியிடுகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள்  ஏற்கெனவே தங்களின் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அக்கட்சிக்குப் போதிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலையில், பி.ஜே.பி. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வெங்கைய நாயுடு, துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

தவிர, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள அ.தி.மு.க-வின் இரு அணிகளுமே வெங்கைய நாயுடுவுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன. தவிர, மக்களவையில் போதிய பலத்துடன் பி.ஜே.பி உள்ளது, மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும், கூட்டணிக் கட்சிகள், அ.தி.மு.க-வின் புரட்சித்தலைவி அம்மா (ஓ.பி.எஸ்) அணி மற்றும் அம்மா (எடப்பாடி) அணியின் ஆதரவு கிடைத்துள்ளதால், வெங்ககைய நாயுடு, துணை ஜனாதிபதியாக வெற்றிபெறுவது இப்போதே உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

எனினும், எம்.பி-க்கள் வாக்களிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே டெல்லியில் பிரதமர் மோடி இன்று பி.ஜே.பி. மற்றும் கூட்டணிக்கட்சிகளின் எம்.பி.-க்களைச் சந்தித்து, துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலின்போது 21 எம்.பி.-க்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், இந்த முறை எம்.பி-க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று, பிரதமர் தனது சந்திப்பின்போது எடுத்துக்கூறுவார் என்று தெரிகிறது.

வெங்கய்ய நாயுடுதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 81 மாநிலங்களவை உறுப்பினர்கள், 337 மக்களவை உறுப்பினர்கள் தவிர்த்து, அ.இ.அ.தி.மு.க, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சிகளின் எம்.பி-க்களும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் எம்.பி-க்கள் சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி விளக்கமளிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தவிர, துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வெங்கைய நாயுடுவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வார் என்று பி.ஜே.பி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 21 எம்.பி-க்கள் உள்பட 77 பேர் போட்ட ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதுபோன்று, துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்குகள் வீணாவதைத் தடுக்கும் வகையில், எம்.பி-க்கள் சரியான முறையில் வாக்களிக்க இன்றைய கூட்டத்தில் அறிவுறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். எம்.பி.-க்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இதில் தென்னிந்திய உணவு வகைகள் உள்பட பல்வேறு வகையான உணவுகளும் இடம்பெறும் என்று தெரிகிறது.

எப்படி இருப்பினும் வெங்கைய நாயுடு துணை ஜனாதிபதியாக வெற்றிபெறுவது உறுதி!  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close