Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெங்களூரு மெட்ரோவிலிருந்து இந்தி பெயர்ப் பலகைகள் அகற்றம்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்த இந்தி பெயர்ப் பலகைகள் நீக்கப்பட்டன. 

hindi board

பெங்களூரு நகரில் இயங்கிவரும் ’நம்ம மெட்ரோ’ ரயில் நிலையங்கள் அனைத்திலிருந்து இந்தி பெயர்ப்பலகைகளை மெட்ரோ நிர்வாகம் நீக்கியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இந்தி பெயர்ப்பலகைகளை நீக்க வேண்டும் என்று கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

கர்நாடக ரக்‌ஷன வேதிகே என்ற அமைப்பு சார்பில் நடந்துவந்த போராட்டங்களுக்கு அம்மாநில தி.மு.க-வும் களமிறங்கியது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இந்தி பெயர்ப்பலகைகளை நீக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், நம்ம மெட்ரோ நிர்வாகம் இந்தி பெயர்ப்பலகைகளை நீக்கியுள்ளது. அதற்குப் பதிலாக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் தாங்கிய பெயர்ப்பலகைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தினேஷ் ராமையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close