Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

'சந்தைகளில் இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத்  தடை விதிக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை' என்ற ஆர்.டி.ஐ. தகவல்குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்

அரசின் இந்த அறிவிப்புக்கு கேரளா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மத்திய அரசின் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் அதிரடியாக அறிவித்தனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இறைச்சி உண்ணும் போராட்டங்கள் பல இடங்களிலும் நடைபெற்றன .

இந்நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் மாட்டிறைச்சித் தடை விவகாரம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்களைக் கோரியிருந்தார். அதற்கு வந்த பதிலில், 'மாட்டிறைச்சித் தடை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வித ஒப்புதலும் பெறவில்லை' என்ற தகவல் வந்தது. அதனால், இந்தப் பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அந்த ஆர்வலர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஒரு சட்டம் இயற்றப்பட்ட 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். இல்லையேல், அந்தச் சட்டம் செல்லாதது ஆகிவிடும்’ எனக் குறிப்பிட்டு மத்திய அரசின் பதிலைக் கோரியிருந்தார். இந்த மனுமீதான விசாரணையில், உச்ச நீதிமன்றம் மத்திய அரசை விரைந்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close